Daily Horoscope
✕

அதிமுக ஓட்டுக்கள் எங்களுக்கு தான் கிடைக்கும்..! ரேஸில் இணைந்த திமுக..!!

Written By Senthil Velan
Updated: செவ்வாய், 2 ஜூலை 2024 (14:59 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக, நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து அதிமுக ஓட்டுகள் எங்களுக்கு தான் கிடைக்கும் என்று திமுக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற பத்தாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன.
 
இந்த தேர்தலை அதிமுக,  தேமுதிக புறக்கணித்து உள்ள நிலையில், அந்தக் கட்சிகளின் வாக்குகளை பெற பாமக, நாம் தமிழர் இடையே போட்டி  நிலவுகிறது. இரு கட்சிகளும் அவர்களின் ஆதரவை கோரி உள்ளனர்.
 
இந்நிலையில் எம்ஜிஆர் ஒரு காலத்தில் திமுகவில் தான் இருந்தார் என்றும் எனவே அதிமுகவின் ஓட்டு எங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

ALSO READ: ராகுல் காந்தியை போல் செயல்படாதீர்கள்..! NDA எம்பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..!!
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அப்படி என்றால் எல்லோரும் வந்து அதிமுகவில் சேர்ந்து விட வேண்டியதுதானே என்றும் விமர்சித்துள்ளார். அவருக்கு அடையாளம் கொடுத்தே அதிமுக தான்' எனத் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

மோடியை கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளருக்கு விசா மறுப்பு.. கடைசி நிமிடத்தில் பரபரப்பு..

அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... காலிஸ்தான் நேஷனல் ஆர்மி' பெயரில் வந்ததால் பரபரப்பு...

சொந்த வீடு கனவை நினைவாக்க!.. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விஜய் அறிவிப்பு...

அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மகனுக்கு பிஎம்டபிள்யூ கார்.. தந்தை கொடுத்த பரிசு..

தொடர் கொலைகள்.. இரண்டரை மணி நேரமாக ஆலோசனை செய்த விஜய்!...

அடுத்த கட்டுரையில்
Show comments