ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்: தீர்ப்பு எப்போது?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு, சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றிய நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைனில் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்தன.
இந்த விசாரணையில் தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது என தமிழக அரசு வாதாடியது. மேலும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதாடப்பட்டது
ஆனால் தமிழக அரசுக்கு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர அதிகாரம் இல்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வாதாடின. இந்த நிலையில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. இருப்பினும் இன்னும் சில நாட்களில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran