வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (13:29 IST)

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் தேவையற்றது..! வானதி சீனிவாசன்..!!

Vanathi Srinivasan
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனி தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
 
இந்நிலையில் இது குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கு உள்ள கவலைகளையும் அதில் உள்ள பிரச்னைகளையும் பாஜக புரிந்து கொள்கிறது என்றார்.
 
மக்கள் தொகை, காலநிலை மாற்றதிற்கு ஏற்ப ஒரே நாடு, ஒரே தேர்தலுக்குக்காக முன்னாள் குடியரசு தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து அரசு கட்சிகளுக்கும் இது தொடர்பாக கருத்துக் கூற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இதை ஒரு சீர்திருத்தமாகப் பார்க்க வேண்டுமே தவிர, தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளைக் கொண்டு மற்றவர்களையும் குழப்பும் செயலில் ஈடுபடக்கூடாது என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டார். 

 
குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் இரண்டாம் பாகத்தில் கலைஞர் கருணாநிதி கூட ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆதரவானக் கருத்தை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் தேவையற்றது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.