செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (06:47 IST)

மீண்டும் எஸ்மா சட்டம்? கலக்கத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்

சுப்ரீம் கோர்ட்டும் அறிவுறுத்தியும் போராட்டத்தை கைவிடாத தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, மீண்டும் 'எஸ்மா' சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
அரசு ஊழியர்கள் 14 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த 2003அம் ஆண்டு வேலைநிறுத்தம் செய்தபோது ஜெயலலிதா தலைமையிலான அரசு எஸ்மா சட்டத்தை கையில் எடுத்து வேலைநிறுத்தம் செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் ஜெயலலிதா பாணியில் மீண்டும் எஸ்மா சட்டத்தை கையில் எடுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு முடிவு செய்துள்ளது.
 
அரசுக்கு மெஜாரிட்டி ஆபத்து, நீட் தேர்வு போராட்டம் ஆகியவற்றை சந்தித்து வரும் தமிழக அரசு தற்போது இந்த வேலைநிறுத்தமும் தொடர்ந்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என உளவுத்துறை தகவல் அளித்துள்ளதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எஸ்மாவை கையில் எடுக்கவுள்ளதாகவும், இதுகுறித்து  தமிழக அரசின் உயர் அதிகாரிகள், இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.