செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (17:29 IST)

15 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் !

கோவை மாவட்டம் போத்தனூரில் 15 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ள பஜனை கோயில் வீதியைச் சேர்ந்தவர் முமகது பீர் பாஷா.

இவர், அதே பகுதியில் வசித்து வருகின்ற ஒரு 15 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தச் சிறுமி தன் தாயிடம் கடிதத்தைத் கொடுத்துள்ளார்.

அதனால், சிறுமியின் குடும்பத்தினர் முதியவரை மிரட்டியுள்ளனர். அதன்பிறகு சில நாட்கள் கழித்து,முதியவர் சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார் என தெரிகிறது.

இதையடுத்து,  சிறுமியின் குடும்பத்தினர் கோவை கிழக்கு அனைத்து காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் முகமது பீர் பாட்ஷாவை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.