ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 12 நவம்பர் 2016 (12:00 IST)

திருப்பூரில் மூட்டை மூட்டையாக கிடந்த பழைய ரூபாய் நோட்டுகள்: முண்டியடித்து எடுத்து சென்ற மக்கள்!

திருப்பூரில் மூட்டை மூட்டையாக கிடந்த பழைய ரூபாய் நோட்டுகள்: முண்டியடித்து எடுத்து சென்ற மக்கள்!

திருப்பூர் அவினாசி அருகே முள்புதர் நிறைந்த காடு ஒன்றில் உள்ள இடுகாட்டில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிடந்துள்ளது. இதனை மக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.


 
 
கடந்த 8-ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதனை வங்கியில் மாற்றி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார்.
 
ஆனால் வங்கியில் பழைய பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு நடைமுறைகள் சில உள்ளன. 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்பவர்களின் வருமான வரி கணக்குகளை வருமானவரித் துறையினர் ஒப்பிட்டு பார்த்து கணக்குகள் சரியில்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
 
இதனால் கருப்பு பணத்தை வைத்திருப்போர் அதனை மாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். பல இடங்களில் குப்பைகளில் பணத்தை வீசுவதும், எரிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் திருப்பூர் அருகே இடுகாடு ஒன்றில் 6௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பணத்தை எடுக்க போட்டி போட்டுள்ளனர். இந்த போட்டியில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
 
தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து அதனை யார் வீசி சென்றுள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.