1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (07:33 IST)

ஜாபர் சாதிக்கை தீவிர விசாரணை.. மலேசிய பிரமுகரால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியா?

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை தற்போது காவலில் எடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் இந்த விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளதாகவும் இதனால் தமிழ் திரை உலகினர் ரொம்பவே பீதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
சாதிக்குடன் தொடர்பில் இருந்த மலேசிய பிரமுகர் தமிழ் திரையுலகில் பட விநியோகம் பைனான்ஸ் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் அவருக்கு இன்னொரு முகம் இருப்பதாகவும் அந்த முகம் குறித்து தான் தற்போது மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது

எனவே அந்த மலேசிய பிரமுகருடன் தொடர்பில் இருந்த பல தமிழ் திரை உலக நட்சத்திரங்களிடம் விசாரணை நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தமிழ் திரையுலகில் உள்ள பலர் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே சாதிக் உடன்  தொடர்புடைய சில திரை நட்சத்திரங்களை விசாரணை செய்ய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக புறப்படும் நிலையில் தற்போது மலேசிய பிரமுகருடன் தொடர்புடையவர்களிடமும் விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva