அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது-ஓ.பி.எஸ்!
அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது.....
தற்போது பிரிந்து இருக்கின்றோம் கூடிய விரைவில் ஒன்று சேருவோம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பது என்பது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையிலிருந்தே தெரிய வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்க்குடும்பத்தினருக்கும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார்.