வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (13:28 IST)

அன்பு சகோதரர் நலம்பெற வேண்டுகிறேன்! – நடிகர் விவேக் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்!

நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலம்பெற வேண்டி ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.

பிரபல தமிழ் காமெடி நடிகரான விவேக் நடிப்பில் மட்டுமல்லாது, சமூக செயற்பாடுகளிலும் ஆர்வம் கொண்டவர். அப்துல்கலாம் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டத்தையும் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.