"ஓரம் கட்டப்படுகிறார் ஓபிஎஸ்" - அதிமுகவில் லக...லக..லக....!
"ஓரம் கட்டப்படுகிறார் ஓபிஎஸ்" - அதிமுகவில் லக...லக..லக....!
அதிமுகவில் ஐவர் அணி கலைக்கப்பட்டு, அது தற்போது இருவர் அணியாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்து, முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றது முதல், கடந்த 5 வருடங்களுக்கு மேலாக, கட்சி நிர்வாகிகளையும், ஆட்சியில் உள்ள முக்கிய நிர்வாகத்தையும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன் ஆகிய ஐவர் அணி கவனித்து வந்தனர்.
இந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆனால், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
ஆனால், தோல்வி அடைந்த வைத்தியலிங்கத்திற்கு, ராஜ்யசபா எம்பி கொடுத்து முதல்வர் ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுத்தார்.
இந்த நிலையில், ஐவர் அணி கலைப்பட்டு தற்போது அது இருவர் அணியாக மாறியுள்ளது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் குறைப்பட்டு, அந்த இடம் வைத்தியலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து தமது கட்சியின் முழுமையான ஆதரவை தெரிவித்தார்.
அப்போது, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் மட்டுமே உடன் இருந்தனர்.