செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 மே 2019 (14:32 IST)

பதவி கிட்டதட்ட கன்பார்ம்: ஓபிஎஸ் பாட்சா பலிக்காது போலயே... சய்லெண்ட்டாய் சாதித்த ஈபிஎஸ்!

பாஜக அமைச்சரவையில் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம் மத்திய அமைச்சராவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற ஒரே எம்பி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இதனால் அவருக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தருவதில் ஓபிஎஸ் தீவிரமாக உள்ளார். 
 
ஆனால் முதல்வர் ஈபிஎஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த தலைவர் வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கேட்டு பெறலாம் என கூறிவந்ததாக தெரிகிறது. ஈபிஎஸ் முடிவையே அதிமுக தலைவர்களும் ஆதரிக்கின்றனராம். 
ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே எம்பியான தனது மகனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தருவதில் ஓபிஎஸ் உறுதியாக செயல்ப்பட்டு வருகிறாராம். நாளை மோடி பதவியேற்க உள்ள நிலையில், அதிமுக சார்பில் அமைச்சராக போவது யார் என்ற கேள்வி இருந்து வந்தது.  
 
ஆனால், தற்போது வெளியான தகவலின்படி வைத்தியலிங்கம் மத்திய அமைச்சராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. இதனால், டெல்லி சென்று நெருக்கமாக இருந்த ஓபிஎஸ்-ன் பாட்சா பலிக்காது போல...