புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 29 மே 2021 (09:50 IST)

எதிர்கட்சி என்று இல்லாமல் மனம் விட்டு பாராட்டிய ஓபிஎஸ்!

கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என ஓபிஎஸ் பாராட்டு. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்ஸிஜன் வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகின்றது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்கள் எண்ணிக்கையை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
ஆனால் மறுபுறம் ஓபிஎஸ், கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன் என பாராட்டியுள்ளார்.