திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2025 (15:31 IST)

சீமானுக்கு மரண அடி? கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்! - காலியாகும் நாம் தமிழர் கூடாரம்!

NTK Kaliyammal

நாம் தமிழர் கட்சியிலிருந்து பலர் விலகி வந்த நிலையில் முக்கிய பிரபலமான காளியம்மாளும் விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சீமானின் நாம் தமிழர் கட்சியில், கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சீமான் தன் விருப்பத்திற்கு செயல்படுவதாகவும், சாதிய பாகுபாடுகள் கடைபிடிக்கப் படுவதாகவும் கூறி கடந்த சில காலமாக பலரும் நாதகவிலிருந்து விலகி வருகின்றனர்.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகராகவும், பேச்சாளராகவும் விளங்கிய காளியம்மாள் தான் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நிலையில் காளியம்மாள் உள்ளிட்ட பலர் விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

 

மேலும் நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு பிறகு பெரும் ஆளுமையாக காளியம்மாள் வளர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளது சீமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் காளியம்மாளுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கு காரணமாக அவருடைய ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K