வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (10:04 IST)

இப்போ நான் பெரும் சிக்கலான இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறேன்! - திருமாவளவன்!

மது ஒழிப்பு மாநாட்டை அறிவித்து விசிக தலைவர் திருமாவளவன் தற்போது சிக்கலான புள்ளியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

மதுவால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைத்து மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருதுகோளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘மது ஒழிப்பு மாநாடு’ நடத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து வரும் நிலையில், பாமக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.

 

இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன்  “மது ஒழிப்பு பிரச்சினையை பொது பிரச்சினையாக பார்க்க தெரியாத சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், இது அரசியலுக்காக நடத்தப்படுவதாக முடிவு செய்து கொள்கிறார்கள். இப்போது நான் சிக்கலான புள்ளியில் நின்றுக் கொண்டிருக்கிறேன்.
 

 

மது ஒழிப்பை 100 சதவீதம் தூய நோக்கத்தோடு, சமூக பொறுப்போடு விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுத்துள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும் பிரச்சினைகளை நாங்கள் துணிந்து பேசுவோம். ஈழத் தமிழர்கள் பிரச்சினையின்போது அதிமுகவோடு இணைந்து பயணித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள். ஆளுங்கட்சிக்கு நெருடலை தர நாங்கள் போராட்டம் நடத்தவில்லை.

 

தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அதற்கான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என அவர் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K