வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (18:16 IST)

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
 
திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற கார்த்திகை தீப விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கார்த்திகை தீபம் விழாவுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்று கூறப்பட்டு இருந்தபோதிலும் அண்ணாமலை கோவில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தே திருவண்ணாமலை தீபத்தை தொலைக்காட்சி மூலம் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது