Daily Horoscope
✕

டெங்குவை பரப்பிய 2000 கடைகளுக்கு நோட்டீஸ்

Written By sivalingam
Updated: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (09:14 IST)
டெங்கு காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் தலைவிரித்தாடி வரும் நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த தனியார் அமைப்புகளும் தமிழக அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக டெங்கு கொசு அதிகம் உற்பத்தியாகும் இடங்களை கண்டறியும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது


 
 
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருக்கும் கொசு உற்பத்தி ஆகும் பழைய பொருட்களை  2 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் 6 மாதம் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி இதுகுறித்து சென்னை முழுவதும் சுமார் 2000 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
 
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான பழைய டயர்களை உடனடியாக அகற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

AI, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களில் நுழைகிறது ஜியோ.. ஜியோபிரைன்' என்ற சொந்த AI தளம்..

சட்டவிரோத குவாரி.. திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை ரத்து..நீதிமன்றத்தில் தவெக அரசு தகவல்...

வெற்றி பயண திட்டத்தால் தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பு என்பது உண்மைதானா?

மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணம் செய்யும் மோடி - விஜய்.. பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

நேபாள பேரழிவு.. 37 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர்.. பெரும் ஆச்சரியம்..

அடுத்த கட்டுரையில்
Show comments