மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது: ப.சிதம்பரம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மூழ்கி கொண்டிருக்கும் கப்பல் என்றும் அதை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையை இழந்துவிட்ட மைனாரிட்டி அரசை காப்பாற்றுவதற்காக எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளதாக ப.சிதம்பரம் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள டுவிட்டர் பயனாளிகள் இதே நிலைமை உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு இருந்தபோது ப.சிதம்பரம் ஏன் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் காங்கிரஸ் என்ற மூழ்கும் கப்பலையும் யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் கூறியுள்ளனர்.