வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (00:39 IST)

மலையாள நடிகர் திலீபுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

மலையாள நடிகை ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த 71 நாட்களாக சிறையில் இருக்கும் நிலையில் அவருக்கு 4வது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.



 
 
ஏற்கனவே ஒருமுறை அங்கமாலா நீதிமன்றத்திலும் இரண்டு முறை கேரள உயர்நீதிமன்றத்திலும் திலீபுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக அங்கமாலா நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் அளிக்க மறுத்துள்ளது.
 
ஒரு குற்றத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அவர் மீது 60 நாட்களில் சார்ஷீட் போட வேண்டும் என்றும் ஆனால் 71 நாட்கள் ஆகியும் சார்ஷீட் போடவில்லை என்பதால் திலீப் ஜாமீன் பெற தகுதியானவர் என்றும் திலீப் வழக்கறிஞர் வாதாடியதை நீதிபதி ஏற்காததால் அவருக்கு ஜாமீன் 4வது முறையும் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு செப்டம்பர் 28 வரை காவல் நீட்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே செப்டம்பர் 28ஆம் தேதிதான் திலீப் நடித்த ராம்லீலா திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.