வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2024 (11:38 IST)

பிரதமரை வரவேற்க இபிஎஸ் வரவில்லை என்று கவலைப்படவில்லை..! - அண்ணாமலை..!!

பிரதமரை வரவேற்க இபிஎஸ் வரவில்லை என்றால் கவலை இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பிரதமருக்கு பிடித்த தூய்மை இந்தியா திட்டத்தை  திருச்சிக்கு பிரதமர் வரும் நேரத்தில் இன்றைய நாளில் 75 இடங்களில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
குப்பைகள் அதிகளவு சேர்ந்து வருகிறது எனவும் தமிழ்நாடு அரசு குப்பைகளை அகற்றி மீண்டும் உரமாக மாற்றி பல்வேறு விதமான திட்டங்களை  செயல்படுத்த முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  மேலும் குப்பைகளை அகற்றாமல் சாலையில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது என அவர் குற்றம் சாட்டினார். பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சுத்தம் செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். 
 
பிரதமர் மோடி இன்று திருச்சிக்கு வரும் பொழுது முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர் என்றும்  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு அளிக்க இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.  பிரதமரை வரவேற்க முக்கிய தலைவர்கள்  விரும்பினால் அவர்கள் வரவேற்க அனுமதிக்கப்படுவார்கள் அவர் தெரிவித்தார். 
 
மிக முக்கியமாக இரண்டு பெரு வெள்ளங்கள் வந்தும் தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய அண்ணாமலை,  மிகப்பெரிய பெருமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தமிழ்நாடு அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என காட்டமான பதிலை தெரிவித்தார்.