திங்கள், 10 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 மார்ச் 2025 (08:34 IST)

இசைஞானி அல்ல உலக இசைமேதை! இளையராஜாவுக்கு கோலாகல வரவேற்பு!

Ilaiyaraja

லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றத்தை முடித்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு ரசிகர்கள் கோலாகலமான வரவேற்பை அளித்துள்ளனர்.

 

தமிழ் இசையமைப்பாளரான இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளதுடன், பல்வேறு இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். தற்போது இளையராஜா வேலியண்ட் என்ற சிம்போனியையும் உருவாக்கினார். இதன் அரங்கேற்றம் லண்டனில் நடைபெற்றது. 

 

சிம்போனி இசையை உருவாக்கி உலக அளவில் கவனம் ஈர்த்த இளையராஜா இன்று மீண்டும் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த ரசிகர்கள் அவரை உலக இசைமேதை என குறிப்பிட்டு பேனர்களை பிடித்தப்படி நின்றனர்.

 

விமான நிலையம் திரும்பிய இளையராஜாவுக்கு ரசிகர்கள் கோலாகலமான வரவேற்பு அளித்தனர்.

 

Edit by Prasanth.K