1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (17:51 IST)

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

பொதுவாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த மாதஙக்ளில் தமிழகத்தில் அதிக மழை பெய்யும். குறிப்பாக சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி பகுதிகளில் அதிக மழை பெய்யும்.

இந்த வருடமும் இந்த எல்லா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்து வருகிறது. வட கிழக்கு பருவமழையோடு சென்னை சமீபத்தில் ஒரு புயலையும் சந்தித்தது. புயல் கரையை கடக்கும்போது மழை அதிக அளவு பெய்யும் என நினைத்து சென்னை வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்திய சம்பவமும் நடந்தது.

ஆனால், நல்லவேளையாக அதிக மழை பெய்யவில்லை. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. எனவே, அரசு தரப்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை வானிலை மையம் மட்டும் இல்லாமல் சில தனி நபர்களும் மழை குறித்த செய்திகளை சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த மாதம் (நவம்பர்) வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மொஹபத்ரா கூறியிருக்கிறார். அதிலும், இயல்பை விட அதிகமாக, குறிப்பாக இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.