1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (09:34 IST)

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு: தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு..!

north indians
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஏற்கனவே பல்வேறு அரசியல்வாதிகள் கோரிக்கை விடுதுள்ள நிலையில் தற்போது இந்த பணியை செய்ய தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த கணக்கெடுப்பு என்பது இடம்பெயர்வு நடைமுறையை புரிந்து கொள்ளவும் புலம்பெயர்ந்தோரின் வேலை மற்றும் வாழ்க்கைத் தரத்தினை ஆய்வு செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தொழிலாளர் துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
இந்த கணக்கெடுப்புக்கு பின்னரே தமிழ்நாட்டில் எத்தனை வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva