வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (19:07 IST)

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: மொத்தம் எத்தனை பேர் போட்டி?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதி சனி ஞாயிறு என்பதால் அதன் பின் மீண்டும் 15ஆம் தேதி மீண்டும் தொடங்கியது
 
இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை 5002 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆகிய 5002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் இதில் ஆண்கள் 4 ஆயிரத்து 213 பேர்கள் பெண்கள் 787 பேர்களும் திருநங்கைகள் இரண்டு பேர்களும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் வேட்பு மனு வாபஸ் பெறும் தேதி முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் முறைப்படி இறுதி வேட்பாளர் பட்டியலை விரைவில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது