1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 10 மே 2018 (12:20 IST)

இனிமேல் அபராத தொகையாக பணம் கட்ட தேவையில்லை - காவல்துறை அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறலின் போது விதிக்கப்படும் அபராதத் தொகையை பணமாக கட்டாமல் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் ஆப், ஆன்லைன் என பல வழிகளில் செலுத்தும் புதிய நடைமுறையை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

 
ஹெல்மெல் போடாமல் இருப்பது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு ஸ்பாட் ஃபைன், அதாவது அபராதத்தை அந்த இடத்திலேயே வாகன ஓட்டிகள் செலுத்தி வந்தனர். அல்லது காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ செலுத்தி வந்தனர். 
 
இந்நிலையில், தற்போது புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன் படி இனிமேல் அபாரதத்தொகையை பொதுமக்கள் பணமாக செலுத்த தேவையில்லை. டெபிட் மற்றும் கிரெடிகார்டு மூலமாக செலுத்தலாம். அதற்கான ஸ்வைப்பிங் இயந்திரங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.  அதேபோல், தனது வங்கிக் கணக்குகளிலிருந்து ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். மேலும், பே.டி.எம். இ.சேவா, மொபைல் ஆப் உள்ளிட்டவைகள் மூலமாகவும் செலுத்த முடியும். 
 
இதன் மூலம் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அவர்களிடம் ரொக்கமாக  பெற முடியாத சூழ்நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் பொதுமக்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.