1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (08:02 IST)

தமிழகத்தில் மின்கட்டண உயர்வா? உண்மை கண்டறியும் குழு விளக்கம்..!

tneb
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில் இது குறித்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக ஒரு அட்டவணை சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல் வதந்தி என்றும் இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான செய்தியை தற்போது சிலர் பகிர்ந்து வருகிறார்கள் என்றும் தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு குறித்த தகவலை தற்போது சமூக வலைதளத்தில் சில பரப்பி வருகிறார்கள் என்றும், மின் கட்டண உயர்வு இல்லை என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றும் மின் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை என தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் அளித்தும், இந்த வதந்தி வேகமாக பரவி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva