1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (19:05 IST)

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? எஸ்பி வேலுமணி பேட்டி

velumani
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் சற்று முன் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் 
 
லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நிறைவு பெற்றபோது பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால் தான் இந்த சோதனை நடைபெற்று வருகின்றன என்றும் காவல்துறையை அரசு துஷ்பிரயோகம் செய்கிறது என்றும் வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறாத வகையில் பழிவாங்கும் படலம் படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
சென்னை, தாம்பரம் காஞ்சிபுரம் சேலம் கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்ற நிலையில் 8 மணி நேர சோதனைக்குப் பின் பெரிதாக எந்த ஆவணமும் கைப்பற்றப்பட்டவிலை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது