21 தொகுதிகள் கொண்ட பட்டியல் தயாரானது உண்மையா? தமிழ்நாடு காங்கிரஸ் அறிக்கை..!
திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் கொடுக்க இருப்பதாகவும் அதில் 14 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இன்று மாலை திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நிலையில் விருப்பத்தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் கொடுக்க இருப்பதாக கூறப்படும் பட்டியல் தமிழக காங்கிரஸால் தயாரிக்கப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Edited by Mahendran