புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (10:47 IST)

கைலாசா நாணயம் ரெடி; பாஸ்போர்ட் எப்போ? – நித்தி தடாலடி!

தான் புதிதாக தொடங்க இருக்கும் கைலாசா நாட்டிற்கான நாணயங்களை வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா.

பிரபல சாமியார் நித்யானந்தா தனக்கென தனியாக கைலாசா என்ற தீவை உருவாக்கியுள்ளதாக கூறியதிலிருந்து பரபரப்பாக உற்று நோக்கப்பட்டு வருகிறார். அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டிங்க் ஆகவும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கைலாசாவிற்கு ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா திறக்கபோவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான மீம்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை (Kailashian Dollars) இன்று நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.