1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:32 IST)

ஒரகடத்தில் தயாரிப்பு ஆலையை மூட நிஸ்ஸான் முடிவு

நிஸ்ஸான் நிறுவனம் சென்னை அருகே ஒரகடத்தில் டாட்சன் ரக கார்களை தயாரிப்பு ஆலையை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல். 

 
ஜப்பானை சேர்ந்த நிஸ்ஸான் நிறுவனம் ஒரகடத்தில் டாட்சன் ரக கார்களை தயாரித்து வந்தது. டாட்சன் வகை கார்கள் உற்பத்தியை நிறுத்தப்போவதாக நிஸ்ஸான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட டாட்சன் கார்கள் மட்டும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டாட்சன் கார் உற்பத்தி நிறுத்தப்படுவதால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.