வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (11:59 IST)

நிர்மலா தேவி வழக்கில் அமைச்சர்கள், அதிகாரிகள் சிக்குவார்கள்: வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன்

நிர்மலா தேவி வழக்கில் தமிழக அரசியலில் உள்ள அமைச்சர்கள் சிக்குவார்கள் என  வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கூறினார்.


 
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட  உதவி பேராசிரியை நிர்மலா தேவியை வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சந்தித்தார். 
 
இதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், நிர்மலாதேவிக்கு ஜாமின் கிடைத்து உண்மையை வெளியிட்டால் இந்த ஆட்சி கலையுக்கூடிய நிலை உருவாகும் என்பதால் ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.
 
நிர்மலா தேவி விவகாரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்  IAS அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்பிருப்பதால் நிர்மலாதேவிக்கு ஜாமின் கிடைக்காமல் அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கப்படுகிறது  இது தொடர்பான ஆதாரங்களை சேமிக்க உள்ளேன் என்றார்.