திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (08:00 IST)

கனமழை எதிரொலி: பேருந்துகள் நிறுத்தம், பள்ளிகள் விடுமுறை.. எங்கே தெரியுமா?

holiday
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப் பட்ட நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
இதனை அடுத்து ஒரு சில பகுதிகளில் பேருந்துகள் திருத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva