செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:05 IST)

வேகமாகப் பரவும் நிஃபா வைரஸ்

இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் புதிதாக நிஃபா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் நாள்தோறும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் பலியான சிறுவனின் உறவினர்கள் 38 பேருக்குத் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

 
நிஃபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை, மனநலப் பிரச்சனை, உள்ளிட்ட பிரச்சனைகள் பாதிப்பு அறிகுறிகள் எனவும்,  இந்த பாதிப்புகள் இருப்பின் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.