1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (07:45 IST)

புத்தாண்டு கொண்டாடிவிட்டு மதுபோதையில் பைக்கில் வந்த இளைஞர் விபத்தில் பலி!

புத்தாண்டு கொண்டாடி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாலையில் ஆகாஷ் என்ற 21 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார் 
 
அதன்பின் அவர் தனது பைக்கில் நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற பைக் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  ஆகாஷ்உயிரிழந்தார். அவருடன் வந்த மற்றொரு இளைஞரான நரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
புத்தாண்டு கொண்டாடிவிட்டு மதுபோதையில் பைக்கில் வந்த போது விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது