1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (19:25 IST)

மழைக்காலத்தில் புதிய வைரஸ்,,,மக்களே உஷார்

கோடைக்காலம் முடிந்து தற்போது இந்தியாவில் மான்சூன் எனப்படும் மழைக்காலம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து பூமியைக் குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில் இந்த மழைக்காலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு பார்வோ வைரஸ் தொற்றுப் பரவுவது அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தப் புதியவகை வைரஸ் காற்றின் மூலமாகப் பரவி,வெறும் விலங்குகளை மட்டுமேதாக்குவதாகவும் குறிப்பாக இது நாய்களை அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதித்த விலங்குகளுக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, வாந்தி, ஏற்படும் எனவும் இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது.