செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (13:47 IST)

மும்பையில் முன்கூட்டியே வந்தது மழைக்காலம் - கன மழையால் மக்கள் அவதி

மும்பையில் இந்த ஆண்டு மழைக்காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கன மழை பொழிந்து வருகிறது. 

 
மும்பையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நீர் ரயில் தண்டவாளங்களில் தேங்கியால் காலையில் சில சில மணி நேரம் குர்லா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
தண்ணீர் வடிகட்டியதும் ரயில் போக்குவரத்து சீராகும் என்று மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் தீவிர தாக்கத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மீண்டு வரக்கூடிய அறிகுறிகள் தென்படத் தொடங்கிய நிலையில், மழைக்காலத்தின் வருகை அங்கு பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.