1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2017 (17:53 IST)

அண்ணா, எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி துவக்கம்!!

அ.தி.மு.க. தொண்டர்களாக இருந்து, தென்னக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை நடத்தி வந்த 40 லட்சம் உறுப்பினர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழக கட்சியை துவங்கியுள்ளனர்.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தி செல்ல சரியான தலைமை இல்லை. சசிகலா  தலைமையை ஏற்க தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை. 
 
அதனால் எம்.ஜி.ஆர் 100-வது பிறந்தநாளையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. 
 
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளை கடைபிடித்தல், மாவட்டந்தோறும் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்தல், ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக கிடைக்க செய்தல் போன்ற கொள்கை குறிகோள்கள் வகுக்கப்பட்டு உள்ளது.
 
கட்சிக்கு பொதுச் செயலாளராக தங்க மாரியப்பன், பொருளாளராக கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
கருப்பு, வெள்ளை, சிகப்பு ஆகிய வண்ணங்கள் அடங்கிய கட்சி கொடி நடுவே அண்ணா, எம்.ஜி.ஆர், உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.