வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2024 (10:24 IST)

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

ராமேஸ்வரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலம் தரம் குறைவாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையரே ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலமானது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலமாகும். ஏற்கனவே உள்ள பாம்பன் பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாம்பன் பாலம் கட்டுவதற்கு 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் 2020ல் தொடங்கிய நிலையில் சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து கடந்த அக்டோபர் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில்தான் பாம்பன் பாலத்தின் தரம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கடல்நீர் அரிப்பு பிரச்சினையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை. தூண்களில் தற்போதே அரிப்பு தொடக்கம், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. புதிய பாலத்தில் குறைகளை மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

 

அதை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் குறைகளை சரிசெய்யும் வரை ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கைகளும் எழத் தொடங்கியுள்ளன. புதிதாக கட்டப்பட்ட பாலம் இன்னும் திறக்கபடவே இல்லை. அதற்குள் இப்படி குறைகள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K