வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (21:07 IST)

கத்திப்பாராவை அடுத்து சட்டசபைக்கு பூட்டு? அதிர்ச்சி தகவல்

இன்று காலை சென்னையையே கதிகலங்க வைத்த ஒரு சம்பவம் என்றால் கத்திபாரா மேம்பாலத்தில் போட்ட பூட்டுதான். போக்குவரத்து அதிகமான கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குனர் கவுதமன் தலைமையில் சுமார் 50 மாணவர்கள் திடீரென கத்திபாரா பாலத்தை சங்கிலியால் மறித்து போட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 


இதனையடுத்து போலீசார் இயக்குனர் கவுதமனையும், மாணவர்களையும் கைது செய்து ஒருவழியாக போக்குவரத்தை சீர் செய்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்த நெட்டிஸன்கள் கத்திப்பாராவை அடுத்து செயல்படாத சட்டமன்றத்திற்கும் பூட்டு போட வேண்டும் என்று அதிரடியாக டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிய கருத்துக்களால்தான் ஜல்லிக்கட்டு மற்றும் நெடுவாசல், ஆகிய போராட்டங்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது விவசாயிகளின் போராட்டத்திற்காக சட்டமன்றத்திற்கு மாணவர்கள் பூட்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.