வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2024 (15:20 IST)

நேரா போய் நிவாரணம் கொடுத்தா ஆகாதா? விஜய் வழங்கிய நிவாரண உதவி குறித்து நெட்டிசன்கள் கேள்வி!

Vijay

விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நடிகர் விஜய் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார்.

 

 

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், காரைக்கால், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் ஏராளமான தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர்.

 

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்தார். அதை தொடர்ந்து இன்று பனையூரில் உள்ள அவரது வீட்டில், பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அவர் அளித்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

 

மக்கள் வெள்ளத்தில் தவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் அதை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இடத்திலேயே நிவாரண பொருட்களை வழங்காமல், தன்னுடைய பனையூர் இல்லத்திற்கு வரச்சொல்லி நிவாரணம் தருவது சரியான செயலா என விமர்சித்து வருகின்றனர்.

 

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் பேசுகையில், விஜய் ஒரு பிரபலமான நடிகராகவும் இருப்பதால், தற்போதைய சூழலில் அவர் களத்திற்கு சென்றால் பெரும் கூட்ட நெரிசல், தேவையற்ற விபரீதங்கள் எழக்கூடும் என்பதை கணித்தே, அவர் தனது பனையூர் வீட்டில் வைத்து நிவாரண உதவிகளை அளித்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K