ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் என்னிடம் விசாரணை நடந்ததா? நெல்சன் விளக்கம்..!
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் இயக்குனர் நெல்சனிடம் விசாரணை நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் தன்னிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என நெல்சன் விளக்கம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஐந்தாம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாம்போ செந்தில் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சனின் மனைவி 75 லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் அதை தொடர்ந்து இந்த கொலை விவகாரத்தில் நெல்சனிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நெல்சன் இதனை மறுத்துள்ளார். என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தனது வீட்டிற்கு வந்து காவல்துறை அதிகாரி யாரும் சம்மன் கொடுக்கவில்லை என்றும் இதுவரை காவல் துறையிலிருந்து என் வாழ்நாளில் ஒரு தொலைபேசி அல்லது நேரில் ஆழ்ந்து அழைப்பு விடுவதில்லை என்று கூறியுள்ளார். காவல்துறையின் எந்த அதிகாரியிடம் எனது இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Edited by Mahendran