ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (14:02 IST)

அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் - முதல்வர்

mk stalin
அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவை, உரிய முறையில் அவர்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்திட சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்தோம். RTO அலுவலகத்தில் இருந்த வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்த பிறகு வாகனப்பதிவு மற்றும் ஓட்டுனர் உரிமத்திற்காக விண்ணப்பிக்க வந்த பொதுமக்களிடம் குறைகளை  கேட்டறிந்தோம். தொடர்ந்து, அங்கிருந்த கழிவறையை ஆய்வு செய்து அதனை சுத்தமான முறையில் வைத்திருக்க அறிவுறுத்தியதோடு, அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். ''என்று தெரிவித்துள்ளார்.