ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்க கோரிய மனு.. உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்த ஜனாதிபதி..!
தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்க கோரிய மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மதிமுக அனுப்பி வைத்துள்ளது.
தமிழக ஆளுனர் ஆர்என் ரவியை டிஸ்மிஸ் செய்யக்கோரி மதிமுக கடந்த சில மாதங்களாக கையெழுத்து இயக்கம் நடத்தி இருந்தது. மேலும் மதிமுகவின் கையெழுத்து இயக்க மனு ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கப்பட்டது
இந்த நிலையில் மதிமுகவின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கோரிக்கைக்கு உள்துறை செயலகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran