ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (08:52 IST)

தமிழகத்தில் 1 கோடி பேர் 2வது டோஸ் செலுத்தவில்லை: சுகாதாரத்துறை செயலர் தகவல்

தமிழகத்தில் ஒரு கோடிப் பேர் இரண்டாவது டோஸ் செலுத்தவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. குறிப்பாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் நிலையில் ஒரு கோடி நூறு கோடி பேர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் 
 
மேலும் 4.25 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் மட்டுமே முழு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் எனவே பொதுமக்கள் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.