திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (18:37 IST)

எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சரியான சாட்டையடி: அக்னிபாத் குறித்து பாஜக பிரபலம்

Agneepath
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சரியான சாட்டையடி என பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
இந்திய விமான படை வரலாற்றிலேயே அக்னிபாத் திட்டத்தில் தான் அதிகபட்சமாக இது வரை ஒரே நேரத்தில் 7,49,899 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
 
இதற்கு முன் அதிக பட்சமாக ஒரே நேரத்தில் 6,31,528 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு உரிய பதிலை இந்திய இளைஞர்கள் சட்டையடியாக கொடுத்துள்ளார்கள்.