திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:34 IST)

போருக்கு தயாரான சசிகலா: நாஞ்சில் சம்பத் ஆருடம்!!

சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டதில் இருந்து, அவர் ஒரு போருக்கு தயாராகிவிட்டார் என தெரிகிறது என நாஞ்சில் சம்பத் ஆருடம்.

 
நாஞ்சில் சம்பத் தனது சமீபத்திய பேட்டியில், பெங்களூர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த நாளில் சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டதில் இருந்து, அவர் ஒரு போருக்கு தயாராகிவிட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. டிடிவி.தினகரன்,  அதிமுகவை சசிகலா வழி நடத்துவார் என்று அறிவித்திருக்கிறார்.
 
அதிமுகவில் மிகப் பெரிய ரசாயண மாற்றம் சசிகலாவின் வருகைக்கு பிறகு நிகழ இருக்கிறது. அதில் தர்மயுத்தம் நடத்தியவரும், நம்பிக்கை துரோகம் செய்தவரும் சசிகலாவால் நிராகரிப்படுவார்கள். இவர்கள் அரசியல் சரித்திரம் ஒரு முடிவுக்கு வரும் என்றே நான் நம்புகிறேன்.  
 
டிடிவி.தினகரனிடத்தில் எந்த ஜனநாயக பண்பும் இல்லை. ஒரு வெள்ளம் போல் வந்தவர்களை அவர் வாரி அணைக்கவில்லை. அவர் தலைமையில் இருக்கிற அமைப்பு இன்று ஒரு பெரிய பின்னடைவை  சந்தித்திருக்கிறதற்கு காரணம் அவரது நடவடிக்கைகள் தான் என தெரிவித்துள்ளார்.