திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (10:49 IST)

முன்னாள் மாணவர்கள் அடங்கிய ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

school
முன்னாள் மாணவர்கள் அடங்கிய 'நம்ம ஸ்கூல்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக நம்ம ஸ்கூல் திட்டம் என்ற திட்டம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி முன்னாள் மாணவர்கள் என்ஜிஓ அமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு இணைய வசதி ஆய்வகம் நூலகம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த இந்த திட்டத்திற்கு நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார் 
 
இந்த திட்டத்தின்படி எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதி உதவி வழங்கலாம் என்றும் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதையும் அறியும் வகையில் இணைய தளம் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுப் பள்ளிகள் அனைத்தும் மேம்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva