வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (20:06 IST)

நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 21ஆக உயர்வு

நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஏற்கனவே 20ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் ஒன்று அதில் அதிகரித்துள்ளது
 
நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன் அவர்களுக்கு கொரோனா தொற்றின் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜன் அவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
ஏற்கனவே திமுக எம்எல்ஏக்கள் ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது