முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுகவினர் தத்தெடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிக்குண்டம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த சூழலில். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான திமுகவினர் தாமாக முன்வந்து இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தத்தெடுத்து சொந்த செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலைய சுவர்களில் உள்ள விரிசல்களை சரிசெய்து வர்ணம் பூசுதல் மற்றும் சுகாதார வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.