ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (16:47 IST)

பாடலாசிரியர் அண்ணாமலை கொலை செய்யப்பட்டார்?: மரணத்தில் மர்மம் இருப்பதாக சகோதரர் தகவல்!

பாடலாசிரியர் அண்ணாமலை கொலை செய்யப்பட்டார்?: மரணத்தில் மர்மம் இருப்பதாக சகோதரர் தகவல்!

பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை நேற்று நெஞ்சுவலி காரணமாக மரணம் அடைந்தார். சமீபத்தில்தான் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணமடைந்த நிலையில் இவருடைய மரணம் திரையுலகினரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 
 
இந்நிலையில் இவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் மரணம் இயற்கை இல்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் தம்பி கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியடைய வைக்கிறது.
 
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதால் அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வேட்டைக்காரன், வேலாயுதம், உத்தமபுத்திரன், கோலி சோடா, நான் உள்ளிட்ட பல படங்களில் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ள அண்ணாமலைக்கு வயது 49 ஆகும்.