தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்- முதல்வர் அறிவிப்பு
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமி நாதன். இவர் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நாட்டில், பஞ்சம் போன்ற காலங்களில் விவசாயிகள் மற்றும் அரசின் கொளைகளுடன் இணைந்து பிற விஞ்ஞானிகள் உதவியுடன் பசுமை புரட்சியை ஏற்படுத்தினார்.
மேலும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணியாறினார். சமீபத்தில் சென்னையில் உள்ள தன் இல்லத்தில் காலமானார்.
தற்போது தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
அதில் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் மறைந்த வேளாண் அறிவியலாளர் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவியல் மாணவர்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.